என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு பருத்தியில் தரமான விதை வினியோகம்
- தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பருத்தியில் தரமான விதை வினியோகம் செய்யப்படுகிறது.
- தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு பருத்தி சுரபி சான்று பெற்ற விதைகள் மானிய விலையில் ஒரு கிலோ ரூ.149.75 என விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பரமத்தி வேலூர்:
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பருத்தியில் தரமான விதை வினியோகம் செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு பருத்தி சுரபி சான்று பெற்ற விதைகள் மானிய விலையில் ஒரு கிலோ ரூ.149.75 என ( டிரைகோடெர்மா ஒரு கிலோ விதைக்கு 300 கிராமமும் சேர்த்து) விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தை மற்றும் மாசி பட்டத்தில் பருத்தி சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.
Next Story






