search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகம் - பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்
    X

    திருப்பூர் காலேஜ் ரோடு ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோக பணியை மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்த காட்சி. அருகில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் உள்பட அதிகாரிகள் உள்ளனர். 

    பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகம் - பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்

    • தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியுள்ளது.
    • 13ந் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு அறிவித்துள்ளது.அதன்படி பொங்கல் பரிசு விநியோகம் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 1,165 ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்து 98 ஆயிரத்து 693 கார்டுதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம், அனைத்து பயனாளிகளுக்கும் உரிய நேரத்தில் பரிசு தொகுப்பு சென்றடைவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. கடந்த 5ந் தேதி முதல் நேற்று வரை ரேஷன் பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கிமுடித்துள்ளனர்.

    பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக, பச்சரிசி, சர்க்கரை ஆகியவை போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்பு, லாரிகளில் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்குவதற்காக வழங்குவதற்காக ரூ.79.87 கோடியை இரண்டு 500 ரூபாய் நோட்டுக்களாக கூட்டுறவு சங்கம் கையிருப்பு வைத்துள்ளது. தினசரி தேவைக்கு ஏற்ப ரேஷன் பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ரொக்கத்தை பெற்றுக்கொள்வர்.

    பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் குறிப்பிட்ட நேரத்தில் கார்டில் பெயர் இடம்பெற்றுள்ள உறுப்பினர் யாரேனும் ஒருவர், ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு பெறலாம் என அறிவிக்கப்பட்டது.அதன்படி திருப்பூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை இன்று முதல் பெற உள்ளனர். நாளொன்றுக்கு 200 முதல் அதிகபட்சம் 250 கார்டு தாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்க ரேஷன் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் 2வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும். பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதற்காக அதை ஈடு செய்யும்வகையில் இரண்டு ஞாயிற்றுக்கிழமை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாதம் வரும் 13ந் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பரிசு தொகுப்பு பெறுவதில் புகார் இருப்பின் தொடர்புகொள்வதற்காக 1967, 1800 425 5901 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 0421 2971116 என்கிற எண்ணிலும், மாவட்ட வழங்கல் அலுவலரை 94450 00407, கூட்டுறவு துணை பதிவாளர் (பொதுவினியோக திட்டம்) 73387 20335 என்கிற எண்ணில் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் காலேஜ் ரோடு ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இன்று காலை பொங்கல் பரிசு தொகுப்பு விநியோக பணியை மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×