search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி நகராட்சியில் கலைஞர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வினியோகம்
    X

    கிருஷ்ணகிரி நகராட்சியில் கலைஞர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வினியோகம்

    • உரிமை தொகை பெறுவதற்காக விண்ணப்ப படிவங்கள் நேற்று முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
    • முதல் கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணிகள் நடந்தன.

    கிருஷ்ணகிரி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

    இந்த திட்டம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த உரிமை தொகை பெறுவதற்காக விண்ணப்ப படிவங்கள் நேற்று முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1094 ரேஷன் கடைகளில் 5 லட்சத்து 64 ஆயிரத்து 624 ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளன. இதில் 404 ரேஷன் கார்டுகள் நீங்கலாக மற்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று கலெக்டர் சரயு தெரிவித்திருந்தார்.

    அதன்படி நேற்று முதல் கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணிகள் நடந்தன. கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம் தலைமையில், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார்கள்.

    இது குறித்து சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் கூறுகையில், கலைஞர் உரிமை தொகை திட்டத்தை செயல்ப டுத்தும் தமிழக முதல் -அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள், நேரத்தில் வந்து விண்ணப்பத்தை வழங்க வேண்டும் என்றும், இந்த திட்டம் சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அப்போது அலுவலர் சண்முகம் உடன் இருந்தார்.

    Next Story
    ×