search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் பகுதியில் நெற்பயிர்களில் நோய் தாக்குதல்: கட்டுப்படுத்த  விவசாயிகளுக்கு ஆலோசனை
    X

    பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் பகுதியில் நெற்பயிர்களில் நோய் தாக்குதல்: கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை

    • நோயின் தாக்குதல் தீவிரமாக இருந்தால் நெற்பயிர் முழுவதுமாக காய்ந்து விடும்.
    • கிராம உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வேளாண் விரிவாக்க மையத்தினை தொடர்பு கொள்ளலாம்

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் நடப்பு சம்பா பருவத்தில் 24 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் சில பகுதிகளில் இலை சுருட்டு புழு, இலை கருகல் நோய், மற்றும் பாக்டரியல் நோய் தாக்குதல் உள்ளது. நோய் தாக்குதலால் நெற்பயிர்களின் இலை வெண்மை நிறமாக மாறி காய்ந்து விடும். தீவிர தாக்குதலினால் நெற்பயிர் முழுவதுமாக காய்ந்து விடும்.

    இலைச்சுருட்டு புழு தாக்குதல் இருந்தால் இதனை கட்டுப்படுத்த வேப்பெண்ணைய் 3 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் அல்லது அசாடிராக்டின் 400 மில்லி மருந்தினை 200 லிட்டர் தண்ணீருடன் கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேலைகளில் இலைகள் முழுவதும் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். பாக்டரியல் இலை கருகல் நோயின் அறிகுறியானது இலைகள் காய்ந்தும் சுருண்டும் காணப்பட்டால், இதனை கட்டுப்படுத்த ஸ்டெப்ரோ மைசின் சல்பேட் ஹெக்டருக்கு 300 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு 1250 கிராம் இந்த மருந்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

    இந்த வழிமுறைகளை பின்பற்றி விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாத்து பயனடையலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு அந்தந்த கிராம உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வேளாண் விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றும், மீஞ்சூர் மற்றும் கும்மிடிப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் டில்லி குமார் தெரிவித்தார்.

    Next Story
    ×