என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    நொய்யல் ஆற்றங்கரையில் கல் செக்கு கண்டெடுப்பு
    X

    கோப்புபடம்.

    நொய்யல் ஆற்றங்கரையில் கல் செக்கு கண்டெடுப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமுக்கியம் என்ற இடத்தில் பண்டைய காலத்தில் பயன்பாட்டில் இருந்த கல் செக்கு உள்ளது.
    • கண்டெடுக்கப்பட் டுள்ள கல் பல நூற்றாண்டு பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்றார்.

    திருப்பூர் :

    திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையில் பண்டைய நாகரிகத்தின் அடையாளம் இன்றளவும் இருக்கிறது. முதலிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட நொய்யல் ஆற்றங்கரையையொட்டியுள்ள அமுக்கியம் என்ற இடத்தில் பண்டைய காலத்தில் பயன்பாட்டில் இருந்த கல் செக்கு உள்ளது.

    இது குறித்து திருப்பூர் வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிகுமார் கூறுகையில், 1,000ம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகத்தில் செக்கு கல்லை கோவில்களுக்கு தானமாக வழங்குவர். செக்கில் அரைத்து எண்ணெய் எடுப்பர். கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட கல் செக்குகள் பயன்பாட்டில் இருந்துள்ளன.

    அமுக்கியம் பகுதியில் காணப்படும் செக்கு கல்லில் எழுத்துகள் எதுவும் இல்லாததால் அது எந்த ஆண்டில் பயன்படுத்தப்பட்டது என்பதை கணிக்க முடியவில்லை என்றார்.

    ஆய்வு மைய ஆய்வாளர் பொன்னுசாமி கூறுகையில், நொய்யல் ஆற்றங்கரையில் பண்டையகால நாகரிகம் இருந்ததற்கான எச்சம் தான் இந்த செக்கு கல். அந்த இடத்திற்கு அருகே பண்டைய கால மனிதர்களின் புதைவிடங்கள் உள்ளன.நொய்யல் ஆற்றங்கரையில் 3 கி.மீ., தூரத்தில் பண்டைய கால மனிதர்கள் வாழ்ந்த கத்தாங்கண்ணி, மானூர் என்ற பெயரிலான ஊர்கள் இருந்துள்ளன. அங்கு கண்டெடுக்கப்பட் டுள்ள கல் பல நூற்றாண்டு பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்றார்.

    Next Story
    ×