search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளி வாலிபருக்கு குரூப்-4 தேர்வில் இடையகோட்டை ஒதுக்கப்பட்டதால் அதிர்ச்சி
    X

    மாற்றுத்திறனாளி நாட்ராயன்

    மாற்றுத்திறனாளி வாலிபருக்கு குரூப்-4 தேர்வில் இடையகோட்டை ஒதுக்கப்பட்டதால் அதிர்ச்சி

    • வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது.
    • தொலை தூரத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டதால் மாற்றுத்திறனாளி அதிர்ச்சி

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள கன்னியாபுரத்தை சேர்ந்தவர் நாட்ராயன்(32). மாற்றுத்திறனாளியான இவர் அதேபகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.

    அவருக்கு ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இடையகோட்டை தேர்வு மையமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு ஹால்டிக்கெட் வந்துள்ளது. கால்கள் வளைந்த நிலையில் உள்ள அவரால் உதவியாளர் இல்லாமல் தொலைதூரங்களுக்கு செல்லமுடியாது. தேர்வுக்கு அவர் செல்ல வேண்டுமானால் தனது இருப்பிடத்தில் இருந்து திண்டுக்கல் வந்து பின்னர் ஒட்டன்சத்திரம் வரவேண்டும். அதன்பிறகு மார்க்கம்பட்டி செல்லும் பஸ்சில் ஏறி இடையகோட்டைக்கு வரவேண்டும்.

    காலை 9.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு இவரால் வந்து சேரமுடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் அதிகாரிகள் தனது தேர்வு மையத்தை மாற்றி திண்டுக்கல் அல்லது நத்தம் பகுதியில் ஒதுக்கீடு செய்வார்களா என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×