என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலில் விழுந்து கதறியும் கேட்கவில்லை வீட்டை இடிக்க வந்ததால் தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி தம்பதி
    X

    வீட்டை இடிக்க வந்த நபரின் காலில் விழுந்து கதறிய மாற்றுத்திறனாளி குடும்பத்தினர்.

    காலில் விழுந்து கதறியும் கேட்கவில்லை வீட்டை இடிக்க வந்ததால் தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி தம்பதி

    • பார்வையற்ற மாற்றுத்தி றனாளி வீட்டை மட்டுமாவது விட்டு விட்டு மற்ற வீடுகளை இடிக்குமாறு அந்த பகுதி கிராம மக்கள் அனைவரும் அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
    • தற்கொலைக்கு முயன்ற மாற்றுத் திறனாளி தம்பதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் கடந்த 40 ஆண்டுகளாக பார்வை யற்ற மாற்றுத் திறனாளி தம்பதியான ஜெயபால், நிம்மி ஆகியோர் வசித்து வரு கின்றனர். இவர்களுக்கு 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளார். ஜெயபால் மற்றும் அவரது மனைவி பத்தி, சூடம் ஆகியவற்றை பல்வேறு ஊர்களுக்கு சென்று விற்று பிழைப்பு நடத்தி வரு கின்றனர்.

    இதே பகுதியில் பரமன், பரமசிவம், கருத்தகண்ணன் ஆகியோரும் குடியிருந்து வருகின்றனர். இவை தங்களுக்கு சொந்தமான இடம் என்று மொக்கச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். கோர்ட்டு உத்தரவு மொக்கை ச்சாமிக்கு ஆதரவாக வந்தது.

    இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை உதவி யுடன் வீட்டை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்த ப்பட்டது. அதன்படி ஜே.சி.பி. எந்திரத்துடன் அதிகாரி கள் வீட்ைட இடிக்க வந்த னர். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து காலஅவகாசம் கேட்டனர். ஆனால் அதற்கு மொக்கை ச்சாமி மறுத்து விட்டார். பார்வையற்ற மாற்றுத்தி றனாளி வீட்டை மட்டுமாவது விட்டு விட்டு மற்ற வீடுகளை இடிக்குமாறு அந்த பகுதி கிராம மக்கள் அனைவரும் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பொதுமக்கள் சொல்வதை அவர் கேட்கவில்லை.

    தனது வீட்டை இடிக்க வந்தவர்களின் காலில் விழுந்து கதறியும், அவர்கள் கேட்காததால் தங்கள் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை ஜெயபால், அவரது மனைவி மற்றும் அவரது மகள் ஆகிய 3 பேரும் குடித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவர்கள் 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டிஒருவரும் தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முய ன்றார். அவரையும் பொது மக்கள் காப்பாற்றினர். இச்சம்பவத்தால் வீடுகளை இடிக்க வந்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 5 வீடுகளையும் இடிக்காமல் செல்ல மாட்டோம் என தெரிவித்து அதனை நிறைவேற்றியே சென்றனர். தற்கொலைக்கு முயன்ற மாற்றுத் திறனாளி தம்பதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×