என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை ஸ்டெம் அறிவியல் பூங்காவில் டிஜிட்டல் கோளரங்க காட்சி
    X

    நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி பேசினார். அருகில் ஆணையர் சரவணகுமார் மற்றும் பலர் உள்ளனர்.

    தஞ்சை ஸ்டெம் அறிவியல் பூங்காவில் டிஜிட்டல் கோளரங்க காட்சி

    • பயிற்சியின் நோக்கம் குறித்து மாநில துணைத்தலைவர் பேராசிரியர் சுகுமாரன் விளக்கினார்.
    • முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்தா நகரில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெம் அறிவியல் பூங்காவில் தஞ்சாவூர் மாநகராட்சியும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தஞ்சை மாவட்டக்கிளையும் பிணைந்து பகுத்தறிவாளர் மருத்துவர் நரேந்திரத போல்கரின் நினைவு நாளான தேசியஅறிவியல் மனப்பான்மை தினத்தை முன்னிட்டு சிறப்பு டிஜிட்டல் கோளரங்க காட்சியை நடத்தியது.

    ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    தஞ்சை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் கலைவாணி தலைமை தாங்கினார்.

    மாவட்டச்செயலர் முருகன் வரவேற்றார்.

    பயிற்சியின் நோக்கம் பற்றி மாநில துணைத்தலைவர் பேராசிரியர் சுகுமாரன் விளக்கி பேசினார்.

    மாநிலசெயற்குழு உறுப்பினர் ஜெயமுருகன் வானியல் தொடர்பாக விளக்கவுரையாற்றினார்.

    மாவட்ட அறிவியல் இயக்க துணைச்செயலர் மஞ்சுளா வாழ்த்தி பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவர்கள்மற்றும் அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர்கள், ஆசிரியைகள் சத்யா, செந்தமிழ்ச்செல்வி, தலைமை ஆசிரியர் பிரியா, மற்றும் கண்ணன் , மாவட்ட நிர்வாகிகள் தியாகராஜன், ரவிச்சந்திரன், கருத்தாளர்கள் ஐ.பி.எ பள்ளி நிர்வாகிகள் பாலசந்திரன், சொக்கலிங்கம், பூங்கா மேலாளர் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    முடிவில் மாவட்டப் பொருளாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.

    Next Story
    ×