என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரூரில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா போராட்டம்
- மாற்றுத்திறனாளி பெண் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
- கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் நிபந்தனைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்த்தி உடனடி கடன் வழங்க வேண்டும்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் ரவுண்டான பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே ஷபானா காதர் என்ற மாற்றுத்திறனாளி பெண் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கூட்டுறவு வங்கிகளின் விதிமுறைகள் காரணமாக மாற்றுத்திறனாளிகள் கடன் கோரும் போது இரண்டு அரசு ஊழியர்கள் அவர்களின் ஆதார், குடும்ப அட்டை, வங்கிப் புத்தகம், இரண்டு புகைப்படம், அரசின் சம்பள சான்று என எட்டு வகையான சான்றுகளை கொடுக்க வேண்டும்.
அது மட்டும் இன்றி ரூ.100 பத்திரத்தில் உறுதிமொழி படிவம் கொடுக்க வேண்டும் எனக் கூறி கடன் கோரும் அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் கடன் வழங்காமல் அலைக்கழிக்கின்றனர்.
கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் நிபந்தனைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்த்தி உடனடி கடன் வழங்க வேண்டும் என கோரி மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு முதல்- அமைச்சர் கோரிக்கை அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.






