என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே சண்டையில் உயிரிழந்த   பெண் யானையின் உடல் பிரேத பரிசோதனை
    X

    ஓசூர் அருகே சண்டையில் உயிரிழந்த பெண் யானையின் உடல் பிரேத பரிசோதனை

    • பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
    • யானையின் உடல் பாகங்கள் பிற உயிரினங்களுக்கு உணவாக விட்டு செல்லப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம் காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தில் உரிகம் வனச்சரகம் உள்ளது. இங்குள்ள காட்டில் உன்சேபச்சிகொல்லை சரக பகுதியில் நேற்று வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.

    இது குறித்து வன பணியாளர்கள் ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய தலைமையில் உதவி வன பாதுகாவலர் ராஜமாரியப்பன், உரிகம் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் மற்றும் சரக வன ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் தருமபுரி மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து ஓசூர் வன கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கேயே யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். சுமார் 4 மணி நேரம் இந்த பிரேத பரிசோதனை நடந்தது.

    அதில் யானைக்கு 36 முதல் 38 வயது இருந்ததும், யானையின் உடலில் வெளிப்பகுதியில் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. காட்டில் யானைகளுக்கு இடையே சண்டை நடந்ததும், இதில் பெண் யானை காயம் அடைந்து இறந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து யானையின் உடல் பாகங்கள் பிற உயிரினங்களுக்கு உணவாக விட்டு செல்லப்பட்டது.

    Next Story
    ×