என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழாவை தொடங்கி வைத்த கலெக்டர்
  X

  தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழாவை தொடங்கி வைத்த கலெக்டர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புத்தக கண்காட்சி, மின்னும் வண்ணங்கள் உணவு திருவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
  • தருமபுரி கலெக்டர் சாந்தி ரிப்பன் வெட்டி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

  தருமபுரி,

  தருமபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி, புத்தக கண்காட்சி, மின்னும் வண்ணங்கள் உணவு திருவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. முப்பெரும் விழாவில் செந்தில் கல்வி குழுமங்கள் தலைவர் செந்தில் கந்தசாமி தலைமையில் தருமபுரி கலெக்டர் சாந்தி ரிப்பன் வெட்டி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

  செந்தில் கல்வி அறக்கட்டளை துணைத் தலைவர் மணிமேகலை புத்தகத் திருவிழா அரங்கையும். தருமபுரி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் உணவு திருவிழா அரங்கையும் திறந்து வைத்தனர். அறிவியல் கண்காட்சியில் மாணவ மாணவியர் தயாரித்த 200-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் காட்சிப்படு த்தப்பட்டிருந்தது.

  உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு மூலிகை உணவு. காய்கறிகள் கீரை வகைகள் உள்ளிட்ட அரங்குகள் தனித்தனியே அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தியிருந்தனர். புத்தகத் திருவிழா அரங்கில் பள்ளி மாணவ மாணவியருக்கு சலுகை விலையில் புத்தகங்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர்.

  50-க்கும் மேற்பட்ட அரங்குகளில் முப்பெரும் விழா கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நிர்வாக அலுவலர் சக்திவேல் நன்றி கூறினார்.

  Next Story
  ×