என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி பழைய இரும்பு கடை உரிமையாளர் விபத்தில் பலி
- தெரியாத வாகனம் திலீப்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
- அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரியை அடுத்துள்ள காரிமங்கலம் போலீஸ் சரகம் ஏ.சப்பாணிப்பட்டியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் திலீப்குமார் (வயது 29). இவர் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார்.
நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.அப்போது பொன்னேரி என்ற இடத்தருகேயுள்ள ஒரு ஓட்டல் அருகே வந்தபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திலீப்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் படுகாயம் அடைந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மசந்திரம் பகுதியை சேர்ந்த கவுரிசங்கர் (37) என்பவர் ஓசூர்-பெங்களூரு சாலையில் ஜூஜூவாடி செக்போஸ்ட் அருகே நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த கார் மோதியதில் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அவரது மனைவி மதுபாலா கொடுத்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






