என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி குண்டலப்பட்டியில் சீலக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
- கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடக்கியது.
- அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
தருமபுரி,
தருமபுரி அடுத்த செம்மாண்ட குப்பம் ஊராட்சி குண்ட லப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சீலக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடக்கியது.
இந்த விழாவையொட்டி ஏராளமான பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க முக்கிய விதிகள் வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து யாக சாலை பூஜைகளும், வாஸ்து பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டு சிறப்பு பூர்ணாகுதி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சீலக்காரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.






