என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி, கிருஷ்ணகிரி  தபால் நிலையம்  இரவு 8 மணி வரை செயல்படும்
    X

    தருமபுரி, கிருஷ்ணகிரி தபால் நிலையம் இரவு 8 மணி வரை செயல்படும்

    • திங்கட்கிழமை முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்
    • வங்கி சேவை, அஞ்சல் காப்பீடு மற்றும் தபால் சேவை உட்பட அனைத்து பரிவர்த்தனைகளும் நடைபெறும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி தர்மராஜா கோயில் தெருவில் செயல்பட்டு வரும் கிருஷ்ணகிரி தலைமை அஞ்சலகம், பொதுமக்களின் நலன் கருதி நாளை (12ம் தேதி) திங்கட்கிழமை முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

    வங்கி சேவை, அஞ்சல் காப்பீடு மற்றும் தபால் சேவை உட்பட அனைத்து பரிவர்த்தனைகளும் நடைபெறும் அஞ்சலகமாக செயல்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக ்கொள்கிறோம்.

    வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதே போல் தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணி ப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் பொது மக்களின் நலன் கருதி தருமபுரி தலைமை அஞ்சலகம் வருகின்ற 12-ம் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வங்கி சேவை, அஞ்சல் காப்பீடு மற்றும் தபால் சேவை உட்பட அனைத்து பரிவர்த்தனைகளும் நடைபெறும் அஞ்சலகமாக செயல்பட உள்ளது.

    வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

    Next Story
    ×