என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி உழவர் சந்தையில் சமத்துவ பொங்கல் விழா
- விழாவுக்கு உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
- விழாவையொட்டி பாரம்பரிய முறைப்படி கருப்பு கரும்பு, மஞ்சள் கொம்பு மற்றும் பூஜை பொருட்களுடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி உழவர் சந்தையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி உழவர் சந்தை வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. விழாவுக்கு உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
உதவி நிர்வாக அலுவலர்கள் மஞ்சுநாதேஸ்வரன், முனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி பாரம்பரிய முறைப்படி கருப்பு கரும்பு, மஞ்சள் கொம்பு மற்றும் பூஜை பொருட்களுடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
பி ன்னர் விழாவில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
Next Story






