என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி உழவர் சந்தை பகுதியில்   போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை
    X

    உழவர் சந்தைக்கு முன்பு கிருஷ்ணகிரி- தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் அத்து மீறி கடை வைப்பதால் வாகனங்கள் நிறுத்த இடம் இன்றி போக்குவரத்து இடையூறு ஏற்படும் காட்சி.

    தருமபுரி உழவர் சந்தை பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை

    • உழவர் சந்தைக்கு தினம் தோறும் 500 -க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் வந்து செல்கின்றனர்.
    • புதுப்பிக்கப்பட்ட பகுதியில் வாகனங்களை நிறுத்த வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி நான்கு ரோடு அடுத்த கிருஷ்ணகிரி -தருமபுரி தேசிய நெடுஞ்சாலை ஆவின் அலுவலகம் அடுத்து உழவர் சந்தை இயங்கி வருகிறது இந்த உழவர் சந்தையில் 100- க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. வேளாண்மை துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த உழவர் சந்தைக்கு தினம் தோறும் 500 -க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் வந்து செல்கின்றனர்.

    உழவர் சந்தைக்கு வரும் நுகர்வோர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை கிருஷ்ணகிரி தருமபுரி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்துவதால் காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வந்தது.

    தருமபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கடந்த ஆண்டு உழவர் சந்தையை ஆய்வு செய்து போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக உழவர் சந்தையை ஒட்டி உள்ள கழிவுநீர் கால்வாய் மீது சிெமண்ட் சிலாப்புகள் அமைத்து அதற்கு மீது சிமெண்ட் கற்கள் ஒட்டி அந்தப் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு அறிவுறுத்தினார்.

    அதன் அடிப்படையில் கழிவு நீர் கால்வாய் மீது சிமெண்ட் சிலாப்புகள் அமைக்கப்பட்டு சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட்டு பணிகள் முடிந்த நிலையில் சிலர் அத்துமீறி சாலையில் காய்கறி கடைகளை வைப்பதால் உழவர் சந்தைக்கு வரும் நுகர்வோர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தி விட்டு செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    அதனால் உழவர் சந்தைக்கு வரும் நுகர்வோர் வாகனங்களை கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்ட் சிலாப் அமைத்து புதுப்பிக்கப்பட்ட பகுதியில் வாகனங்களை நிறுத்த வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அத்துமீறி சாலை ஓரத்தில் கடை வைத்துள்ளவர்களை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நுகர்வோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×