என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் - நாளை வழங்கப்படுகிறது
  X

  குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் - நாளை வழங்கப்படுகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடும்ப நலத் துறையின் சாா்பில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.
  • அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செவிலியர்கள் நேரில் சென்று வழங்குவார்கள்.

  வீரபாண்டி :

  திருப்பூா் மாவட்டத்தில் 7.8 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் எஸ். வினீத் தெரிவித்துள்ளாா்.

  இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தேசிய குடற்புழு நீக்கும் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் சாா்பில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.

  அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் 19 வயது வரையில் உள்ள 7.8 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்கும் 'அல்பெண்டசோல்' மாத்திரை நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்படும்.

  அதேபோ 20 வயது முதல் 30 வயதுடைய பெண்கள் (கா்ப்பிணிகள், பாலுட்டும் தாய்மாா்களைத் தவிர) 2.04 லட்சம் பேருக்கும் மாத்திரைகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

  குடற்புழுதொற்றில் இருந்து விடுபட இந்த மாத்திரைகளை உட்கொள்வது அவசியமாகும். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் இந்த மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கணபதிபாளையம் துணை சுகாதார கிராம செவிலியர் கார்த்திகா கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் நாளை முதல் தவணையாக குழந்தைகள்.பெண்கள் 9.84 லட்சம் பேருக்கு குடற்புழு மாத்திரை வழங்கப்படுகிறது.

  1-19 வயதுடைய குழந்தைகளுக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள்) 7.80 லட்சம் மற்றும் 20வயது முதல் 30வயது வரை 2.04 லட்சம் கர்ப்பிணி.பாலூட்டும் தாய்மார்கள் உட்பட பெண்களுக்கும் குடற்புழு மாத்திரை வழங்கப்படுகிறது . குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு,சோர்வு,பசியின்மை,ரத்த சோகை, குமட்டல் வாந்தி ஏற்படும்.குடற்புழு தொற்று தடுக்கும் வகையில் பெண்டசோல் என்கிற குடற்புழு மாத்திரை வழங்கப்படும்.

  மாத்திரையை காலை அல்லது மதியம் உணவு உட்கொண்ட பின் அரைமணி நேரம் கழித்து உட்கொள்ள வேண்டும்.எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. அருகில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் பெறலாம். அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செவிலியர்கள் நேரில் சென்று வழங்குவார்கள்.

  நாளை காய்ச்சல்,சளி,வயிற்றுபோக்கு போன்றவைகள் இருந்தால் குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்கப்படாது. அதற்கு பதிலாக 21-2-23 (செவ்வாய்க்கிழமை) வழங்கப்படும் என்றார்.

  Next Story
  ×