search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி மகாலய அமாவாசையை முன்னிட்டு பவானி கூடுதுறையில் ெபாதுமக்கள் புனித நீராடினர்
    X

    புரட்டாசி மகாலய அமாவாசையை முன்னிட்டு பவானி கூடுதுறையில் ெபாதுமக்கள் புனித நீராடினர்

    • காவிரி, பவானி மற்றும் அமுதநதி என மூன்று நதிகளும் சங்கமமாகும் பவானி கூடுதுறை தென்னகத்தின் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.
    • ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் பரிகார பூஜை செய்து முக்கூடல் ஆற்றில் புனித நீராடினர்.

    குமாரபாளையம்:

    காவிரி, பவானி மற்றும் அமுதநதி என மூன்று நதிகளும் சங்கமமாகும் பவானி கூடுதுறை தென்னகத்தின் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களும் பொதுமக்களும் ஆற்றில் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர்.

    இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் பரிகார பூஜை செய்து முக்கூடல் ஆற்றில் புனித நீராடினர்.

    ஆற்றில் நீராடும் போது பக்தர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டால் அவர்களை காப்பாற்ற பரிசல்களுடன் பரிசல் வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பவானி டி.எஸ்.பி சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான போலீ சார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கடந்த இரண்டு வருடங்களாக கொராணா நோய்த்தொற்றால் பவானி கூடுதுறை ஆற்றில் பரிகாரம் செய்து புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தடைகள் நீக்கப்பட்டதால், நாமக்கல், குமாரபாளையம், பள்ளிப் பாளையம், சேலம், ஈரோடு கரூர், திருப்பூர், கோவை மாவட்டம் உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த வர்களும் பெருமளவில் கலந்து கொண்டு புனித நீராடினர்.

    Next Story
    ×