search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்டி கருப்பணசாமி கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு அசைவ விருந்து ரெயிலை நிறுத்தி வழிபட்ட ஊழியர்கள்
    X

    வண்டி கருப்பணசாமி கோவில் அருகே ரெயிலை நிறுத்தி வழிபாடு நடத்திய ஊழியர்களை படத்தில் காணலாம்.

    வண்டி கருப்பணசாமி கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு அசைவ விருந்து ரெயிலை நிறுத்தி வழிபட்ட ஊழியர்கள்

    • திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே வண்டி கருப்பணசாமி கோவில் உள்ளது.
    • ஆடி கடைசி நாட்களான நேற்றும், இன்றும் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    வடமதுரை:

    திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே வண்டி கருப்பணசாமி கோவில் உள்ளது. வாகன ஓட்டுன ர்களை விபத்தில் இருந்து காக்கும் கடவுளாக கருத ப்படும் வண்டி கருப்பண சாமிக்கு ஆடி மாதம் முழு வதும் பல்வேறு நேர்த்தி க்கடன்கள் செலுத்தப்படும்.

    குறிப்பாக வாகனங்கள் வைத்துள்ளவர்கள் இங்கு வந்து ஆடுகளை பலியிட்டு அதனை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விருந்து வழங்குவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் இது போன்ற வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்த வருடம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆடி மாதம் பிறந்ததில் இருந்து ஏராளமானோர் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    குறிப்பாக ஆடி கடைசி நாட்களான நேற்றும், இன்றும் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இன்று திண்டுக்கல்லில் இருந்து திருச்சி சென்ற சரக்கு ரெயிலை நிறுத்தி அதில் இருந்த ஊழியர்கள் இறங்கி வந்து வண்டி கருப்பணசாமியை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து கோவிலில் இருந்து எலுமிச்சம்பழம், பூ உள்ளிட்ட பூஜை பொருட்களை எடுத்து வந்து ரெயில் முன்பு கட்டி அதன் பிறகு அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் வண்டி கருப்பணசாமி சாலை விபத்துகளை தடுக்கும் கடவுளாக இருந்து வருகிறார். இந்த கடவுளுக்கு ரெயிலை நிறுத்திய சாமி என்ற பெயரும் உள்ளது. சாலை விபத்துகள் மட்டுமின்றி ரெயில் விபத்துகளையும் வண்டி கருப்பணசாமி தடுத்து வருவதாக நம்பி வருகிறோம்.

    இதனால் ஆடி மாதத்தில் இந்த கடவுளுக்கு வழிபாடு நடத்தி தங்கள் வாகன ங்களுக்கு பூஜை செய்து அதன் பிறகு பயணத்தை தொடர்ந்தால் விபத்து இல்லாமல் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று நம்புகிறோம். அதன்படி ஆடி கடைசி நாளான இன்று ஏராளமான வாகனங்கள் மூலம் இங்கு பக்தர்கள் வந்துள்ளனர்.

    அவர்கள் சுவாமி வழிபாடு மட்டுமின்றி ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடனும் செலுத்தி வருவதில் இருந்தே வண்டி கருப்பணசாமியின் மகத்தும் தெரிய வரும் என்றனர். பக்தர்கள் வருகையால் இன்று கோவில் வளாகத்தில் கூட்டம் அலை மோதியது.

    Next Story
    ×