search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல் அம்மன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு
    X

    ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.

    ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல் அம்மன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு

    • ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • விதவிதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மனை கண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    திண்டுக்கல்:

    ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் மகாதீபாராதணை நடத்தப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

    நகரில் உள்ள ஒய்.எம்.ஆர்.பட்டி காளியம்மன் கோவில், நேருஜிநகர் பன்னாரிஅம்மன் கோவில், ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் கோவில், வழித்துணை மாரியம்மன் கோவில், மலையடிவாரம் பத்ரகாளியம்மன், பாதாளகாளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல் மெங்கிள்ஸ் ரோட்டில் உள்ள பாலநாகம்மாள் கோவிலில் பால் ஊற்றி அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். விதவிதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மனை கண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    Next Story
    ×