என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் சதுர்த்தியை முன்னிட்டு களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் விறுவிறுப்பாக விற்பனையாகிறது.
திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
- திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் பக்தர்கள் அதிகாலை முதல் குடும்பத்துடன் வந்திருந்து விநாயகருக்கு பாலாபிஷே கம் செய்து வழிபட்டனர்.
- விநாயகரை வழிபட்ட பக்தர்கள் அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
திண்டுக்கல்:
முழு முதற்கடவுளான விநாயகரின் பிறந்த தினம் விநாயகர் சதுர்த்தியாக இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாட ப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் பக்தர்கள் அதிகாலை முதல் குடும்பத்துடன் வந்திருந்து விநாயகருக்கு பாலாபிஷே கம் செய்து வழிபட்டனர்.
இங்குள்ள 32 அடி உயர சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டது. அதனை தொட ர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. விநாயகரை வழிபட்ட பக்தர்கள் அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதே போல் நகரின் மத்தியில் அமைந்துள்ள வெள்ளை விநாயகர் கோவிலிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாகல்நகர் ரயிலடி சித்தி விநாயகர் கோவில், ரவுண்டு ரோடு கற்பக விநாயகர் கோவில், நேருஜிநகர் கணபதி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
விநாயகருக்கு பிடித்த மான கொலுக்கட்டை, சுண்டல், பழங்கள், பொரிகடலை போன்றவை படையலாக வைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ப்பட்டன. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு விநாயகர் கோவில்களிலும் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடுகளில் வைத்து வழிபட சிறிய வடி விலான களிமண் சிலைகள் தயார் செய்து விற்கப்பட்டன. இந்த சிலைகள் ரூ.10 முதல் ரூ.3 ஆயிரம் வரை விலை யில் விற்பனையானது. விதவிதமான வடிவங்களில் பல வண்ணங்களில் தயார் செய்து விற்கப்பட்டன. மேலும் விநாயகருக்கு பிடித்தமான எருக்கம்பூ மாலையும் விற்பனை செய்யப்பட்டன.
இதுதவிர பூஜைக்கு தேவையான பூக்கள், தேங்காய், வாழைப்பழம், பேரிக்காய், கொய்யா, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பொருட்களும் அதிக அளவில் விற்பனை யாகிறது.