search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வராயன் மலைப்பகுதியில் 600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு
    X

    கள்ளச்சாராய ஊறல்கள் கொட்டி அழிக்கப்பட்ட காட்சி.

    கல்வராயன் மலைப்பகுதியில் 600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

    • 6 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.
    • கல்வராயன் மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்வராயன்மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராய ஊழல்களை கண்டுபிடித்து போலீசார் அழித்து வருகின்றனர். நேற்று முன்தினம் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல்ஹக் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண் டு மோகன்ராஜ் தலைமையில் கொண்ட போலீசார் கல்வராயன் மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது 6 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி தலைமையிலான போலீசார் நேற்று கல்வராயன் மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது கோவில் மொழிபட்டு கிராமம் அருகே கள்ள சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய மூன்று பிளாஸ்டிக் பேரல்களில் 600 லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இந்த குற்ற செயலில் ஈடுபட்ட தலைமறைவான குற்றவாளி வெங்கட்ராமன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

    Next Story
    ×