என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கிராம உதயம் சார்பில் டெங்கு காய்ச்சல் கொசுப்புழு தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
  X

  கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு கிராம உதயம் நிறுவனர் சுந்தரேசன் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கினார்.

  கிராம உதயம் சார்பில் டெங்கு காய்ச்சல் கொசுப்புழு தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கிராம உதயம் தலைமை அலுவலக வளாகத்தில் டெங்கு காய்ச்சல், கொசுப்புழு தடுப்பு பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.
  • கருத்தரங்கில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  நெல்லை:

  நெல்லை கோபாலசமுத்தி ரத்தில் உள்ள கிராம உதயம் தலைமை அலு வலகம் சார்பாக அலு வலக வளாகத்தில் டெங்கு காய்ச்சல் கொசுப்புழு தடுப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் டெங்கு காய்ச்சல் கொசுப்புழு தடுப்பு பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.

  கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர். சுந்தரேசன் தலைமை தாங்கி விழிப்புணர்வு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் டாக்டர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி வரவேற்று பேசினார்.

  கிராம உதயம் தனி அலுவலர் ரேவதிகுமாரி, பகுதி பொறுப்பாளர்கள் முருகன், ஆரோக்கியமிக்கேல், ஜீவா, மைய தலைவர்கள் சென்டு, பேச்சியம்மாள் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். முடிவில் கிராம உதயம் தன்னார்வ தொண்டர் பிரியங்கா நன்றி கூறினார்.

  இந்த டெங்கு காய்ச்சல் கொசுப்புழு தடுப்பு பயிற்சி கருத்தரங்கில் 500-க்கும் மேற்பட்ட கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள், மைய தலைவர்கள், குழு தலைவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

  மேலும் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள் 300-க்கும் மேற்பட்டோர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் கொசுப்புழு தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்குதல் வீட்டில் நீர் தேங்காமல் தடுத்தல் போன்ற விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  Next Story
  ×