search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
    X

    நானோ யூரியா தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. 

    ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

    • 10 முதல் 15 நிமிடங்களில் ஒரு ஏக்கரிலும் மருந்து கலவையை தெளிக்கலாம்.
    • சரியான அளவு சீராக மருந்து கலவை தெளிக்கப்படுவதால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம் திருவதேவன் கிராமத்தில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் நானோ யூரியா தெளிப்பது மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்த செயல் விளக்கம் விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் மூலம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு உழவர் பயிற்சி நிலைய தஞ்சை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பால சரஸ்வதி தலைமை வகித்து பேசியதாவது, விவசாயத்தில் ட்ரோனின் பயன்பாடு அடுத்த தொழில்நுட்ப அலையாகும்.

    விவசாயத்தில் ட்ரோன்களை பயன்படுத்துவதால் காலநிலை மாற்றங்களை சமாளித்து எதிர்கால வேளாண் உற்பத்தி தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது.

    ட்ரோன் பயன்படுத்து–வதால் மருந்து கலவைத்–துளிகள் பயிர்களின் இலைகள் மீது நேரடியாக படுகிறது. மேலும் 90 சதவீத தண்ணீர் உபயோகத்தையும் 40 சதவீதம் மருந்தின் அளவையும் கணிசமாக குறைக்க முடிகிறது என்றார்.

    சேதுபாபாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி பேசும் போது, ஒரு நாளைக்கு 30 முதல் 40 ஏக்கர் வரை ட்ரோன் மூலமும், 10 முதல் 15 நிமிடங்களில் ஒரு ஏக்கரிலும் மருந்து கலவையை தெளிக்கலாம்.

    நிலத்தில் ரசாயனங்களை சரியான அளவு முறையாக பயன்படுத்துவதால் விவசாயிகளின் உற்பத்தி செலவு குறைகிறது.

    லாபம் அதிகரிக்கிறது. பயிர்களின் மேல் சரியான அளவு சீராக மருந்து கலவை தெளிக்கப்படுவதால் பயிர்களின் வளர்ச்சியை நன்றாக இருக்கிறது.

    இந்த ஆளில்லா குட்டி விமானம் 3 கிலோ மீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டது என்றார்.

    நிகழ்ச்சியில் சேதுபாவா–சத்திரம் வட்டாரத் துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரமணியன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ், உதவி வேளாண்மை அலுவலர் பிரதீபா, அட்மா திட்ட தொழில்நுட்ப உதவி மேலாளர்கள் தமிழழகன், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×