என் மலர்
உள்ளூர் செய்திகள்

பராமரிப்பின்றி கிடக்கும் சிறுவர் பூங்காவை படத்தில் காணலாம்.
பராமரிப்பின்றி சீரழிந்து வரும் சிறுவர் பூங்காவை சீரமைக்க கோரிக்கை
- ஊத்தங்கரையில் சிறுவர் பூங்காவை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- 1987 ஆம் ஆண்டு ரூ. 78 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி ரோட்டில் உள்ள இந்திரா நகரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் மற்றும் எல்.ஐ.ஜி குடியிருப்புகள் உள்ளது.
இந்த குடியிருப்புகள் 1987-ம் ஆண்டு ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் 72 குடியிருப்புகள் கட்டப் பட்டு அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் திறப்பு விழா நடத்தப்பட்டது. குடியிருப்புகளை ஒட்டியவாறு மக்கள் பயன்பாட்டிற்கு என சிறுவர் பூங்கா மற்றும் 2 கடைகள் அமைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் ஓய்வு நேரத்தை இந்த பூங்காவில் தான் பயன்படுத்தினார்கள்.
பூங்காவில் சிறுவர்கள் பொழுதுபோக்கிற்கு பயன்படுத்தும் சாதனங்கள் பழுதாகி சேதமடைந்து உள்ளது. குப்பைகள் கொட்டும் தளமாக காட்சி அளிக்கிறது. பூங்காவில் உள்ள மின்சாதனங்கள் சேதம டைந்துள்ளது. பூங்காவை தன்னுடைய பொறுப்பில் வைத்து பராமரிக்கும் ஊத்தங்கரை தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பூங்காவை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






