search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலுக்கு சிக்னல் கோளாறு காரணமாக தாமதமாக வந்த ரெயில்கள்
    X

    நாகர்கோவிலுக்கு சிக்னல் கோளாறு காரணமாக தாமதமாக வந்த ரெயில்கள்

    • ரெயில்களின் இயக்கத்திற்கு முக்கியமானது சிக்னல்கள் தான்.
    • தாம்பரத்தில் இருந்து வந்த சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஆரல்வாய்மொழியில் நிறுத்தப்பட்டது.

    குமரி மாவட்டத்திற்கு தமி ழகத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் தினசரி பல்வேறு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் பிரதான ரெயில் நிலையமாக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து தான் கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலங்களுக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் ரெயில்கள் சென்று வருகின்றன.

    இந்த ரெயில்களின் இயக்கத்திற்கு முக்கியமானது சிக்னல்கள் தான். இன்று காலை இந்த சிக்னல் திடீரென பழுதானதால் நாகர்கோவில் வந்த மற்றும் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் ரெயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தான். இந்த ரெயில் நாகர்கோவில் சந்திப்பு நிலையத்திற்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. அதுவும் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தூரங்களே உள்ள பகுதியில் தான் இந்த சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நேற்று மாலை கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் காலை 4.55 மணிக்கு நாகர்கோ வில் ரெயில் நிலையம் வந்து சேர வேண்டும். ஆனால் நாகர்கோ வில் ரெயில் நிலையம் அருகே ஊட்டு வாழ் மடம் ரெயில்வே கேட் அருகே திடீரென சிக்னலில் கோளாறு ஏற்பட்ட தால் ரெயில் நிறுத்தப் பட்டது.

    நீண்ட நேரமாகி யும் சிக்னல் கிடைக்கா ததால் ரெயில் அங்கேயே நிற்க பயணிகள் தவிப் புக்குள்ளா னர்கள். இது குறித்து ரெயில்வே பணியா ளர்களுக்கு தகவல் தெரி விக்கப்பட் டது. அவர்கள் விரைந்து வந்து சிக்னலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் சுமார் 1½ மணி நேரத்துக்கு பிறகே சிக்னல் சரி செய்யப்பட்டது. அதன் பிறகு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அங்கி ருந்து புறப் பட்டு நாகர்கோ வில் ரெயில் நிலை யத்திற் குள் வந்தது.

    இதே போல் தாம்ப ரத்தில் இருந்து வந்த சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பி ரஸ், ஆரல் வாய் மொழி யில் நிறுத்தப்பட்டது. காலை 6.50 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வரவேண்டிய இந்த ரெயில், காலை 7.30 மணிக்கு வந்தது. பெங்களூ ருவில் இருந்து புறப் பட்டு காலை 7.15 மணிக்கு நாகர்கோ வில் வர வேண் டிய எக்ஸ்பி ரஸ் ரெயில் 8 மணிக்கு வந்தது. நெல்லை யில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு நாகர்கோ வில் டவுன் வழியாக செல்லும் ரெயிலும் நடுவழி யில் நிறுத்தப் பட்டது. காலை 6.50 மணிக்கு நாகர்கோ வில் டவுன் ரெயில் நிலையம் வர வேண் டிய இந்த ரெயில் 8.20 மணிக்கே வந்தது. அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.

    இதேபோல் நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்பட்ட ரெயில்களும் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றன. காலை 6.15 மணிக்கு புறப்பட வேண்டிய மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் 40 நிமிடம் தாமதமாக 6.55 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. காலை 7.50 மணிக்கு புறப்படும் கோவை எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் தாமதமாக 8.40 மணிக்கும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் காலை 8.05 மணிக்கு பதிலாக 9 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

    ரெயில்களின் தாமதம் காரணமாக ரெயிலில் இருந்த பயணிகள் மட்டுமின்றி, அவர்களை வரவேற்க மற்றும் வழியனுப்ப நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தவர்களும் தவிப்புக்குள்ளா னார்கள். வழக்கமாக ரெயில் ஒழுகினசேரி பாலம் பகுதியில் வந்தவுடன் அதில் பயணிப்பவர்கள், தங்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து ரெயில் நிலையம் வர சொல்வார்கள். இன்று காலையும் அதேபோல் தகவல் கொடுத்ததால், பலரும் ரெயிலில் வரும் தங்கள் சொந்தங்களை அழைத்துச் செல்ல நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வந்திருந்தனர்.

    ஆனால் ரெயில்கள் தாமதமாக வந்ததால் ரெயில் நிலையம் பரபரப்பாகவும் கூட்ட நெரிசலுடனும் காணப்பட்டது. அடிக்கடி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இது போன்ற சிக்னல் கோளாறுகள் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருவதாக பயணிகள் பலரும் வேதனை தெரிவித்தனர்.

    Next Story
    ×