search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிற்பட்டோர் நலத்துறை மூலமாக பட்டா வழங்குவதில் தாமதம்
    X

    சூரநத்தம் கிராமத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வரும் குடிசை வீடு.

    பிற்பட்டோர் நலத்துறை மூலமாக பட்டா வழங்குவதில் தாமதம்

    • பிற்பட்டோர் நலத்துறை மூலமாக இலவச மனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
    • கலெக்டருக்கு நத்தம் பட்டா வழங்க கோரி மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டத்தில் திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்பட்டோர் நலத்துறை மூலமாக இலவச மனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகளில், 20 ஆயிரம் பேருக்கும் மேற்ப ட்டோருக்கு இலவச மனை பட்டா வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் 3 ஆயிரம் பேருக்கு இலவச மனை பட்டா வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டாக வீட்டுமனை பட்டா வழங்குவதில் தொய்வு நீடிக்கிறது.

    மாவட்ட அளவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இலவச மனை பட்டா கேட்டு காத்திருக்கின்றனர்.

    இதுதொடர்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின துறை அதிகாரிகள் கூறுகையில், அரூர் ஒன்றியத்தில் நீர் நிலை புறம்போக்கு, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை த்துறை உட்பட பல்வேறு துறைகளுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டது.

    நகர்ப் புற மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடுகள் கட்டி தரப்பட்டு வருகிறது. வீடுகளில் வசித்தவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு கிடைத்துள்ளது.

    கிராமங்களில் வசிப்பவர்களுக்கு வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு பல்வேறு ஆய்விற்கு பின்னர் இலவச மனை பட்டா வழங்கப்படுகிறது. வரும் காலங்களில் கூடுதலாக பட்டா வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது என்றனர்.

    கோட்டப்பட்டி ஊராட்சி சூரநத்தம் கிராமத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பல்வேறு வீடுகள் சேதமடைந்து குடியிருப்பதற்கு உகந்ததாக இல்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கலெக்டருக்கு நத்தம் பட்டா வழங்க கோரி மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    Next Story
    ×