search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் மரங்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும்- மக்கள் நலன் இயக்கம் வலியுறுத்தல்
    X

    தமிழ்நாடு மக்கள் நலன்இயக்க கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.


    தமிழகத்தில் மரங்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும்- மக்கள் நலன் இயக்கம் வலியுறுத்தல்

    • தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் மாநிலமாநாடு மற்றும் 8-ம் ஆண்டு விழா உடன்குடி பேரூராட்சி மண்டபத்தில் நடந்தது.
    • மனித உரிமை ஆணையத்தின் மூலமாக மனித உரிமை மீறல்கள் எற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    உடன்குடி:

    தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் மாநிலமாநாடு மற்றும் 8-ம் ஆண்டு விழா உடன்குடி பேரூராட்சி மண்டபத்தில் நடந்தது.

    மாநிலத்தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழுவை சேர்ந்த காசிலிங்கம் ஆத்திமுத்து, முத்து, ரமேஷ், ஞானசேவியர், உடன்குடி நகர நிர்வாகி மகராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட தலைவர் மூர்த்தி வரவேற்று பேசினார். மாநில துணைத் தலைவர் மனோகரன் தொகுப்புரை வழங்கினார்.

    இந்த அமைப்பின் நிறுவனரும், மாநில பொதுச் செயலாளருமான முகைதீன்கல்வி உபகரணங்கள், சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி தீர்மானங்களை வாசித்தார்.

    உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் விவசாய நிலங்களை எடுக்கக்கூடாது, தரிசு நிலங்களை தான் எடுக்கவேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட்ஆலையை எந்த சூழ்நிலையிலும் திறக்கஅரசுஅனுமதி வழங்கக்கூடாது.

    தமிழகம் முழுவதும் மரங்கள் மீது போர்டுகளை வைத்து ஆணிகளால் சேதம் ஏற்படுத்துவது, கம்பியைவைத்து விளம்பரம் போர்டுகளை கட்டுவது போன்றவற்றை உடனடியாக தடுக்க வேண்டும். பனங்கருப்பட்டி கற்கண்டுகளில் கலப்படம் செய்ய கூடாது,

    மனித உரிமை ஆணையத்தின் மூலமாக மனித உரிமை மீறல்கள் எற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.

    நிகழ்ச்சியில் மருத்துவர் சுந்தர் உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் அன்பு ராணி, மும்தாஜ்பேகம், முன்னாள் கவுன்சிலர் சலீம், விவசாய சங்கத் தலைவர் சந்திரசேகர் சிவலூர், ஜெயராஜ், அசோக், சுப்பையா, முகைதீன் அப்துல் காதர், கலீல்ரகுமான், முரசுதமிழ்ப்பன், விடுதலை செழியன் உட்பட பலர் கலந்து கொன்டனர்.

    Next Story
    ×