என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாலமலை ஊராட்சிக்கு செல்லும் மண் சாலை சேதம்; போக்குவரத்து பாதிப்பு
  X

  மண் சாலை அரிப்பு ஏற்பட்டு சாலை சேதம் அடைந்துதிருப்பதை படத்தில் காணலாம்.

  பாலமலை ஊராட்சிக்கு செல்லும் மண் சாலை சேதம்; போக்குவரத்து பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாலமலை ஊராட்சி கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
  • பாலமலைக்கு செல்ல மலைப்பாதைக்கான சாலை வசதி கிடையாது.

  மேட்டூர்:

  சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலமலை ஊராட்சி கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.பாலமலைக்கு செல்ல மலைப்பாதைக்கான சாலை வசதி கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு மண் சாலை வசதி அமைக்கப்பட்டது.

  கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழை காரணமாக இந்த மண் சாலை அரிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் இந்த ஊராட்சி அமைக்கப்பட்டுள்ள மண் சாலையில் நடைபெற்று வந்த ஜீப் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் பழையபடி கண்ணாமூச்சி மலை அடிவாரத்தில் இருந்து தங்கள் கிராமத்திற்கு நடந்தே செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

  Next Story
  ×