search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பம் அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான மரங்கள் வெட்டி கடத்தல்
    X

    வெட்டி கடத்தப்பட்ட மரங்களை படத்தில் காணலாம்.

    கம்பம் அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான மரங்கள் வெட்டி கடத்தல்

    • வருவாய்த்துறைக்கு சொந்தமான மரங்களை மர்ம நபர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடியோடு வெட்டி கடத்தியுள்ளனர்.
    • அதிகாரிகளின் துணையோடு நடந்ததா என்று விசாரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கம்பம்:

    கம்பம் அருகேயுள்ளது நாராயணத் தேவன்பட்டி ஊராட்சி, இந்த ஊராட்சியிலிருந்து சுருளிஅருவிக்கு செல்லும் பழைய சாலை சுமார் 2 கி.மீ தூரம் சாலை அமைக்க தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 91 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் சாலை அமைக்கப்படும் இடத்தில் பழமை வாய்ந்த வேம்பு, மா உள்ளிட்ட பல வகை மரங்கள் இருந்தன.

    இந்நிலையில் அந்த மரங்களை மர்ம நபர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடியோடு வெட்டி கடத்தியுள்ளனர். இதனை பார்த்த ஊராட்சி நிர்வாகத்தினர், நாராயணத்தேவன் பட்டி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.அனுமதியின்றி மரங்களை வெட்டியதால் கிராம நிர்வாக அலுவலர் முருகன் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து வருவாய் ஆய்வாளர் நாகராஜிடம் மரம் வெட்டியது குறித்து வி.ஏ.ஓ மூலம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    இது குறித்து நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்த சுற்று சூழல் ஆர்வலர் ஒருவர் கூறும்போது, பல லட்சம் மதிப்புள்ள அரிய வகை மரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது இது வரை வருவாய் துறையினர் மற்றும் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இது அதிகாரிகளின் துணையோடு நடந்ததா என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மரம் வளர்ப்போம், மழை வளம் காப்போம் என்ற அரசின் கொள்கைக்கு எதிராக செயல்படுபவர்கள்மீது ஆர்.டி.ஓ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×