என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் ரூ. 2.15 கோடி செலவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி: மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார்
    X

    கடலூரில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை மேயர் சுந்தரி ராஜா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அருகில் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளார். 

    கடலூரில் ரூ. 2.15 கோடி செலவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி: மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார்

    • வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக ரூ.2.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி க்குட்பட்ட பகுதிகளில் சாலை வசதி, வடிகால் வாய்க்கால் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்வதற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் ஆணை யாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகள் மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் வண்டிப்பாளையம் சரவணா நகர் இணைப்பு சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக ரூ.2.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று காலை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டு பணியை தொடங்கி வைத்தார். ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி பொறியாளர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் வரவேற்றார்.

    இதில் பகுதி செயலாளர் சலீம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, மண்டல குழு தலைவர் சங்கீதா செந்தில் முருகன், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில் முருகன், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×