என் மலர்
உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ஒசூர் எம்.எல்.ஏ.. ஒய்.பிரகாஷ் கோப்பையை வழங்கி பாராட்டினார்.
ஓசூர் அருகே சி.பி.எஸ்.சி. பள்ளிகளுக்கிடையே மாணவிகளுக்கான கால்பந்து போட்டி
- சி.பி.எஸ்.சி.பள்ளிகளில் இருந்து 20 அணிகள் கலந்து கொண்டன.
- நெய்வேலி ஜவகர் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
ஓசூர்,
சி.பி.எஸ்.சி. பள்ளி களுக்கிடையே தென்மண்டல அளவில் 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி, மாணவிகளுக்கான கால்பந்து போட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மதகொண்டபள்ளியில் உள்ள, எம்.எம்.எஸ். சி.பி.எஸ்.சி. பள்ளியில் 2நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், உள்ளிட்ட சி.பி.எஸ்.சி.பள்ளிகளில் இருந்து 20 அணிகள் கலந்து கொண்டன.
இறுதி போட்டியில் நெய்வேலி ஜவஹர் சி.பி.எஸ்.சி.மேல்நிலைப்பள்ளியும், ஈரோடு சி.எஸ். அகடாமி மேல்நிலைப்பள்ளியும் போட்டியிட்டன. அதில் நெய்வேலி ஜவகர் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. மேலும் இந்த அணி தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ஒசூர் எம்.எல்.ஏ.. ஒய்.பிரகாஷ் கோப்பையை வழங்கி வாழ்த்தி பேசினார். மேலும் இதில்,ஓசூர் துணை மேயர் ஆனந்தய்யா, பள்ளி செயலாளர் எம்.மேரு, பள்ளியின் முதல்வர் பிரபு,பொருளாளர் ஆலிவர் சாலமன்,சி.பி.எஸ்.சி. பள்ளிகளின் விளையாட்டு பிரிவு ஆணையர் சைமன் ஜார்ஜ், மேற்பர்வையாளர் கமலராஜ், உள்பட பலர் கொண்டனர்.






