என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளசாராயம் காய்ச்சி விற்றவர் சிக்கினார்
    X

    கள்ளசாராயம் காய்ச்சி விற்றவர் சிக்கினார்

    • மாரண்ட‌அள்ளி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்கானிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
    • அங்கிருந்த 40 லிட்டர் சாராய ஊறல்களை கீழே கொட்டி அழித்தனர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த உலகானஅள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக கள்ள சாராயம் காய்ச்சி விற்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டிபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில் மாரண்டஅள்ளி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்கானிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக குடிபோதையில் வந்த நபரை பிடித்து விசாரித்ததில் உலகானஅள்ளியை சேர்ந்த முருகன் (வயது50) என்பதும், அவரது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த 40 லிட்டர் சாராய ஊறல்களை கீழே கொட்டி அழித்தனர்.

    Next Story
    ×