search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவிகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி  செலுத்துவது குறித்து ஆலோசனை
    X

    பள்ளி மாணவிகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை

    • புற்றுநோய் அதிக பெண்களை பாதிப்பதாக சுகாதாரத்துறை ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
    • அங்கன்வாடி மையங்கள் வாயிலாக தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    மடத்துக்குளம் :

    மார்பக புற்றுநோய்க்கு அடுத்ததாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிக பெண்களை பாதிப்பதாக சுகாதாரத்துறை ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக நம் நாட்டில் பாதிப்பு முந்தைய ஆண்டுகளை விட அதிகமாக (ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை) இருப்பதால் இளம்பெண்களுக்கு வளரிளம் பருவத்திலேயே தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் கூறியதாவது:- அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல், 14 வயதுடைய குழந்தைகள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அதற்கான பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக பெறப்படும் தகவல்களை கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணி இறுதி செய்யப்படும். பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் வாயிலாக தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×