என் மலர்
உள்ளூர் செய்திகள்

வட்டார வளர்ச்சி ஆணையாளர் விஜயசந்திரிகாவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
வெள்ளகவி ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் அதிகாரிகளிடம் உறுப்பினர்கள் புகார் மனு
- ஊராட்சி தலைவர் திட்டங்களை பார்வைக்கு வைக்காமல் கைெயழுத்திடுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
- ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர் ஆகியோரை பதவிநீக்கம் செய்வதோடு ஊழல் புகார் உள்ளதால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே உள்ள வெள்ளகவி கிராமத்தில் சுமார் 250 வீடுகள் உள்ளன. ஆங்கிலேயர்கள் முதன்முதலாக கொடைக்கானலுக்கு வெள்ளகவி வழியாகவே சென்று வந்தனர். பல நூற்றாண்டு காலமாக சாலை வசதி இல்லாமல் இருந்த இந்த கிராமத்திற்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ முயற்சியில் கோட்டாட்சியர் முருகேசன் சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்தினார்.
தற்போது அந்த பணிகள் முழுமைபெறும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.கவை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளுக்கு தீர்வு காண்பார் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் தற்போது அவர் மீது உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வெள்ளகவி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பண்டிதர் கிருஷ்ணவேணி, கோமதி, சுதா ஆகியோர் ஊராட்சி தலைவர் திட்டங்களை பார்வைக்கு வைக்காமல் கைெயழுத்திடுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். அவர் மற்றும் ஊராட்சி செயலர் தன்னிச்சையாக செயல்படுவதால் மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி ஆணையாளர் விஜயசந்திரிகாவிடம் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், கிராமசபை கூட்டத்தை கொடைக்கானல் பகுதியில் தன்னிச்சையாக நடத்தியுள்ளனர். மேலும் பல்வேறு திட்டங்களில் மிகப்பெரிய ஊழல்கள் நடந்துள்ளது. இதுகுறித்து கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணனிடமும் பொதுமக்களுடன் இணைந்து புகார் அளித்துள்ளோம். மேலும் ஊழல் புகார்கள் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர் ஆகியோரை பதவிநீக்கம் செய்வதோடு ஊழல் புகார் உள்ளதால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த குற்றச்சாட்டு வெள்ளகவி ஊராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






