என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
கன்னிவாடியில் பருத்தி வியாபாரி தற்கொலை
தனது வீட்டிலேயே பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்த அவர் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே உயிரிழந்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள டி.புதுப்பட்டியை சேர்ந்தவர் சின்னையா (வயது50). பருத்தி வியாபாரம் செய்து வந்தார். நேற்று தனது வீட்டிலேயே பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே சின்னையா உயிரிழந்தார். இது குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






