என் மலர்
உள்ளூர் செய்திகள்

போக்சோ சட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
- உரிய சட்ட விதிகளை காவல் துறையினர் பின்பற்ற வேண்டும்.
- பாதிக்கப்படும் சிறுமிகளை முதலில் மனதளவில் மீட்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போக்சோ சட்டத்தை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு தலைமை தாங்கி பேசியதாவது:-
போக்சோ சட்டத்தை பயன்படுத்தும் போது உரிய சட்ட விதிகளை காவல் துறையினர் பின்பற்ற வேண்டும். பாதிக்கப்படும் சிறுமிகளை முதலில் மனதளவில் மீட்க வேண்டும். அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கிட வேண்டும்.
மேலும் புகார்கள் மீது விசாரணை நடத்தி குற்ற வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் போது நீதிமன்ற உத்தரவுகளை காவல் துறையினர் பின்பற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து போக்சோ சட்டத்தை பயன்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக காவல் துறையினருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதில் ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் சம்பூர்ணம், துளிர் குழந்தை பாலியல் கொடுமை தடுப்பு மற்றும், குணமளிக்கும் மைய அமைப்பின் நிர்வாகிகள் வித்யாரெட்டி, நான்சி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.