என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அணையில் தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
- வருகிற 19-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
- இந்த கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நீர் தேக்க திட்ட உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அறிவொளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2023-2024-ம் ஆண்டிற்கு முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து, கிருஷ்ணகிரி நீர்த்தேக்க திட்ட நீர்பாசன சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்தாய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி அணையில் உள்ள உதவிசெயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 19-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Next Story






