என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரப்பலாறு அணையில் மணல் சுரங்கம் அமைக்க கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
    X

    கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.

    பரப்பலாறு அணையில் மணல் சுரங்கம் அமைக்க கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

    • தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம், வடக்காடு கிராமத்தில் கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.
    • இக்கூட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பரப்பலாறு அணையின் கொள்ளளவை மேம்படுத்துவதற்காக பரப்பலாறு அணை மணல் மற்றும் வண்டல் மண் சுரங்கம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம், வடக்காடு கிராமத்தில் கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அணை பகுதிகளை அவர் பார்வையிட்டார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி ஆட்சியர்(பயிற்சி) பிரியங்கா, பழனி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் மணிமாறன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் காஜாமைதீன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி, உதவி கோட்டப்பொறியாளர் நீதிபதி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×