என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அரசு கலைக்கல்லூரியில்  மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு
    X

    ஓசூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு

    • பட்டியல், பழங்குடியின மாணவ, மாணவிகள் பதிவு கட்டணமாக தலா ரூ.2 செலுத்தி கல்லூரிக்கு வந்து விண்ணப்பங்களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கலாம்.
    • கலந்தாய்வு வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கல்லூரியில் நடைபெறுகிறது.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் இணையம் வாயிலாக விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு இன்று (புதன்கிழமை) கல்லூரியில் நேரடியாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

    பட்டியல், பழங்குடியின மாணவ, மாணவிகள் பதிவு கட்டணமாக தலா ரூ.2 செலுத்தி கல்லூரிக்கு வந்து விண்ணப்பங்களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கலாம்.

    இவர்களுக்கான கலந்தாய்வு வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கல்லூரியில் நடைபெறுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×