என் மலர்
உள்ளூர் செய்திகள்

கட்டிட தொழிலாளி கொலை: மது குடித்து விட்டு போதையில் தகராறு செய்ததால் அடித்து கொன்றேன்- மனைவி பரபரப்பு வாக்குமூலம்
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
- கோவிந்தன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது43). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மாதம்மாள் (39).
இவர்களுக்கு மாரியப்பன் என்ற மகனும், நாகரத்தினம் என்ற மகளும் உள்ளனர். கோவிந்தனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. குறிப்பாக, கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்த கோவிந்தன் மனைவி மாமாளிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாதம்மாள், அடுப்பூதும் இரும்பு குழாயால் கணவனின் தலை மீது அடித்துள்ளார். இதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் தோப்பூர் போலீசில் புகார் செய்தார். அந்தபேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட கோவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாரிடம் மாதம்மாள் கூறினார் எனது கணவர் கோவிந்தன் தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து என்னிடம் தகராறு செய்ததால் அவரை இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்தேன். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதம்மாளை கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.






