search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பர்கூர் தாலுகாவில் கட்டுமான பணிகள்-கலெக்டர் நேரில் ஆய்வு
    X

    குமாரம்பட்டியில் கசிவுநீர் குட்டை அமைக்கும் பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

    பர்கூர் தாலுகாவில் கட்டுமான பணிகள்-கலெக்டர் நேரில் ஆய்வு

    • குட்டைகள் அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்க விட அறி வுறுத்தப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா, தொகரப்பள்ளி, பட்லப்பள்ளி, குமாரம்பட்டி, நாகம்பட்டி ஆகிய கிராமங்களில் செயல்படுத்தியுள்ள ரூ.13 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பிலான உலர்களங்கள், கசிவு நீர் குட்டைகள் அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மழைநீர் சேகரிப்பு பணிகளுக்காக பல்வேறு துறைகளின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ், பர்கூர், வேப்பனஹள்ளி மற்றும் தளி வட்டாரங்களில் ரூ.6 கோடியே 28 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, நுழைவுகட்டப் பணிகள், இயற்கை வள மேம்பாட்டு பணிகள், வேளாண் உற்பத்தி திட்டப்பணிகள், சுழல்நிதி வழங்கும் பணிகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் பர்கூர் தாலுகா தொகரப்பள்ளியில் ரூ.1 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலும், பட்லப்பள்ளியில் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலும், கண்ணன்டஅள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்பிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ள உலர்கள பணிகளையும், குமாரம்பட்டியில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும், பட்லப்பள்ளியில் ரூ.2 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலும் கட்டி முடிவுற்றுள்ள கசிவுநீர் குட்டை அமைக்கும் பணிகளையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், மத்தூர் ஒன்றியம் கண்ணன்டஅள்ளி ஊராட்சி பெத்தான் ஏரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் தமிப்பில் மதகுகள் அமைக்கப்பட்டு ள்ளதையும் ஆய்வு செய்யப்பட்டது.

    முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், வேப்பனஹள்ளி, தளி ஆகிய 3 ஒன்றி யங்களில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை யின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணி களை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்க விட அறி வுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    இந்த கள ஆய்வின் போது, மாவட்ட நீர்வடிப்பகுதி வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) ஜெகதீசன், வேளாண்மை உதவி இயக்குநர் (நீர்வடிப்பகுதி) சகாயராணி, உதவிப் பொறியாளர் பத்மாவதி மற்றும் நீழ்வடிப்பகுதி உறுப்பினர்கள் பிரபு, இனியன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×