என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
வடமதுரை, அய்யலூர் பகுதியில் விவசாய நிலங்களில் சோலார் பேனல்கள் அமைக்கும் பணி
- புறம்போக்கு நிலங்களில் மட்டும் நடைபெற்ற இந்த பணி தற்போது விவசாய நிலங்களிலும் சோலார் பேனல்கள் அமைக்கப்ப டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
- எனவே சோலார் பேனல்கள் முறையான அனுமதி பெற்று அமைக்கப்படுகிறதா? என சோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே வடமதுரை, அய்யலூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சோலார் மின் பேனல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
புறம்போக்கு நிலங்களில் மட்டும் நடைபெற்ற இந்த பணி தற்போது விவசாய நிலங்களிலும் சோலார் பேனல்கள் அமைக்கப்ப டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் அரசு அனுமதி பெற்று சோலார் பேனர்கள் அமைக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலைக்குன்று மற்றும் சில இடங்களை ஆக்கிரமித்து பேனல்கள் அமைக்கும் பணி சத்தம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவிப்பதும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்துவதும் வாடிக்கையாகி விட்டது. எனவே சோலார் பேனல்கள் முறையான அனுமதி பெற்று அமைக்கப்படுகிறதா? என சோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






