search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடை கட்டுமான பணி  -பிரகாஷ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    கலுகொண்டபள்ளியில் ரேஷன் கடை கட்டுமான பணியை பிரகாஷ் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

    ரேஷன் கடை கட்டுமான பணி -பிரகாஷ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • ரேஷன் கடை கட்டுமான பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.
    • பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி ஒன்றியம் கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் கனிம வளங்கள் மற்றும் குவாரிகள் திட்டத்தின் கீழ் ரூ.15.50 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டுமான பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் நாகமணி பிரபாகர் முன்னிலை வகித்தனர்.

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சந்திரப்பா, கலு கொண்ட பள்ளி ஊராட்சி மன்ற துணைதலைவர் சைத்ரா சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் முனிராஜ், ஒன்றிய கவுன்சிலர் நாராயணசாமி, மஞ்சுநாத், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×