என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் ரெயில் பாதை அமைக்கும் பணி: மாநில அரசின் பங்கை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் மத்திய அரசு திட்டத்தை நிறைவேற்றும்- பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் பேட்டி
- கடந்த, ஜூன் 17-ந்தே தி மத்திய ரெயில்வே மந்திரி என்னிடம் கிருஷ்ணகிரி ரெயில் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.
- கடந்த 3 வருடங்களாக ரெயில் திட்டத்தை பற்றி பேசாத கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி., செல்லகுமார் தற்போது அவரே இந்த திட்டத்தை கொண்டு வந்தது போல் பேசி வருவது வேடிக்கையாக உள்ளது.
கிருஷ்ணகிரி,
பா.ஜனதா கட்சியின் மாநில செய்தி தொடர்பா ளரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் கிருஷ்ணகிரியில் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி ரெயில் திட்டம் என்பது 70 ஆண்டு கால இந்த மாவட்ட மக்களின் கனவு. இன்று நனவாக போகிறது. அதற்கு மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தான் காரணம்.
கடந்த, 1996-ல் நான் எம்.பி.,யாக இருந்தபோதுதான் இந்த திட்டத்திற்கான வரைவறிக்கை தயார் செய்யப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் குழு உறுப்பி னராகவும் தொடர்ந்து இருந்து வருகிறேன்.
இந்த திட்டம் குறித்தும், ஓசுருக்கு மெட்ரோ ரெயில், விமான நிலையம் அமைப்பது தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரி களையும் மத்திய மந்திரிகளையும் தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறோம்.
கடந்த, ஜூன் 17-ந்தே தி மத்திய ரெயில்வே மந்திரி என்னிடம் கிருஷ்ணகிரி ரெயில் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.
எனவே இத்திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள திட்டம். எம்.பி. என்ற முறையில செல்லகுமார் நாடாளுமன்றத்தில் பேசலாம். கேள்வி கேட்கலாம். ஆனால் மத்தியில் ஆளக்கூடியது பா.ஜனதா அரசு. இந்த அரசால் தான் ரெயில் திட்டம் வந்துள்ளது. கடந்த 3 வருடங்களாக ரெயில் திட்டத்தை பற்றி பேசாத கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி., செல்லகுமார் தற்போது அவரே இந்த திட்டத்தை கொண்டு வந்தது போல் பேசி வருவது வேடிக்கையாக உள்ளது.
கடந்த கால கட்டங்களில் வரைவறிக்கை தயார் செய்த போதும் மாநில அரசின் பங்களிப்பு இல்லாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது தமிழக அரசு திவால் ஆகியுள்ளது. இந்த நிலையில் மாநில அரசின் பங்கை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் மத்திய அரசு முழுமையாக திட்டத்தை செயல்படுத்தி வரும் 2024-க்குள் கிருஷ்ணகிரியில் ரயில் பாதை அமைக்கும் பணிகளை தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.






