search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேன்கனிக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா
    X

    விழாவில் பக்தர்கள் தலைமேல் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்துவதையும்,ஆஞ்சநேயர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளிப்பதையும் படத்தில் காணலாம்.

    தேன்கனிக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா

    • தேன்கனிக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • கும்பாபிஷேகம் விழாவில் தலைமேல் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பென்சபள்ளி கிராமத்தில் 16 அடி உயரத்தில் ஸ்ரீ ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேய சுவாமிக்கு புதிதாக விக்கிரகமும், ஆலயமும் கட்டப்பட்டது. இந்த கோவிலில் நேற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி முதல் கோவிலில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதற்கால யாக பூஜை இரண்டாம் கால யாக பூஜை வேதபாராயணம், மற்றும் மூன்றாம் கால யாக பூஜை ஆகியவை தொடர்ந்து நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால யாக பூஜை கோ பூஜை, லட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட கோவிலில் மேளதாளங்கள் முழங்க வேத மந்திரங்கள் ஓதி, கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த மகா கும்பாபிஷேக விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ஒய் பிரகாஷ், கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்ல குமார் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் தலைமேல் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். திருவிழாவை ஒட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இவ்விழாவிற்காக ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×