என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று நடந்தது.
- மாவட்ட துணை தலைவர் ரகமத்துல்லா, நகர தலைவர் லலித் ஆண்டனி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
கிருஷ்ணகிரி, ஜூலை.8-
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று நடந்தது.
அவதூறு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட துணை தலைவர் ரகமத்துல்லா, நகர தலைவர் லலித் ஆண்டனி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பொதுச் செயலாளர் அப்சல் வரவேற்றார்.
கவுன்சிலர் விநாயகம், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் அர்னால்டு, மாவட்ட செயலாளர் சரவணகுமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர்கள் மாரியப்பன், விஜயராஜ், ஓ.பி.சி., மாவட்ட தலைவர் ஹாஜித் பாஷா, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஷபிக் அஹமத், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜேசு துரைராஜ், நாராயணமூர்த்தி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னாள் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்டச் செயலாளர் ஏழுமலை, மாவட்ட மனித உரிமைத்துறை தலைவர் நாகராஜ், அஜிசுல்லா, இளைஞர் காங்கிரஸ் நசீம் இர்பான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






