என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
திண்டுக்கல்லில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- திண்டுக்கல்லில் தலைமை தபால் அலுவலகம் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும், ராகுல்காந்தி, சோனியா காந்தி மீது அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மச்சக்காளை, முகமதுசித்திக், ரோஜாபேகம், கிழக்கு மண்டலதலைவர் கார்த்திக், ஜெகநாதன், வேங்கைராஜா, ஷாஜகான், அப்துல்ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






