என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்
    X

    மாவட்ட தலைவர் முரளிதரன் பேசிய போது எடுத்த படம்.

    ஓசூரில் காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

    • காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் அமைப்புத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

    அந்தவகையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தேர்தல் நடத்துவது தொடர்பாக, வாக்காளர் பட்டியல் வெளியிட்டு,தேர்தல் ஆலோசனைக்கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.

    ஓசூர், பழைய பெங்களூரு சாலையில் உள்ள தனியார் ஓட்டல் கூட்டரங்கில், நடந்த இக்கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.முரளிதரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர். தேன். அன்வர்நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    இதில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.சி.யுமான தர்மசேனா, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் தொடர்பான கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கி, கூட்டத்தில் பேசினார்.

    மேலும் இதில்,கர்நாடக மகிளா காங்கிரஸ் தலைவர் ராதா உமேஷ், தேர்தல் பார்வையாளர்கள் வேலூர் செந்தில், மகாலட்சுமி, தர்மபுரி காவேரியம்மாள் மற்றும் மாநகர தலைவர் நீல கண்டன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சூர்யகணேஷ், மாவட்ட பொருளாளர் மகாதேவன், துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், வட்டார தலைவர் சீனிவாச ரெட்டி, மாவட்ட மகளிரணி தலைவி சரோஜா மற்றும், மாவட்ட, வட்டார, மாநகர நிர்வாகிகள், கட்சியினர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×