என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
- ஸ்குவாட்ஸ் மற்றும் கத்திச்சண்டை போட்டியில் முதலிடம் பெற்றனர்.
- இந்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடந்த ஸ்குவாட்ஸ் மற்றும் கத்திச்சண்டை போட்டியில் முதலிடம் பெற்றனர். மேலும் கைப்பந்து மற்றும் பேட்ச் கைப்பந்து போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் பெற்றனர்.
வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி யின் தலைமையாசிரியர் முன்னிலையில், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஞான வடிவேல் குமரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் தனபால், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சிவப்பிரகாசம், பள்ளி மேலாண்மை குழு தலைவி உத்திர குமாரி, மற்றும் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் செந்தில் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கினார்கள். இந்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.
Next Story






